மாற்றுக்களம் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாக காலம் சென்ற தோழர் கே.செல்வபெருமாள் அவர்களின் எழுத்துக்கள் சிலவற்றை தொகுத்து சிவப்பு எரி நட்சத்திரம் எனும் தலைப்பில் நூலாக வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
இடது இயக்கக் களச் செயல்பாட்டிலும் அறிவு தளத்திலும் எங்களுடன் பயணித்த அன்பு தோழனுக்கு உரிய அஞ்சலியாக இந்த நூலை சமர்ப்பிக்கிறோம்.
கே. செல்வ பெருமாள் ஒரு பன்முக ஆளுமை. இளம் வயதிலேயே தொழிலாளி வர்க்க அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டு தீவிரமான களச்செயல்பாட்டாளராகவும் சுய முயற்சியால் சித்தாந்த தேர்ச்சியும் பெற்றவர். அவர் கற்ற சமூக அரசியல் பாடம் அனுபவங்களை இயக்கத்திற்கு மறு பங்களிப்பாக கொடுக்கத் தொடங்கிய காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சமூக மாற்றத்திற்கான பெருங்கனவோடு தன் வாழ்வை அர்ப்பணித்த அந்த இளைஞனின் அரசியல் பயணம் புற்றுநோயால் தொடக்கத்திலேயே நின்று போனது.
வாழ்ந்த குறுகிய காலத்தில் இடது இயக்கத்தின் களச் செயல்பாடுகள், எழுத்து பணி என நிறைய பங்களிப்புகளை செய்துள்ளார். அவற்றில் ஒரு பகுதியை ஆவணப்படுத்தும் நோக்கோடு அவரது கட்டுரைகள் சிலவற்றை தொகுத்து நூலாக்கி உள்ளோம்.
இக்கட்டுரைகள் அவருடைய சந்திப்பு வலைப்பூவிலும் மார்க்சிஸ்ட் இதழிலும் வெளியானவை. அவர் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கையில் கிராம்சியின் அரசியல் சிந்தனைகள், மார்க்சிய அழகியல் ஆகிய இரண்டு கட்டுரைகளை எழுதினார்.கட்டுரையை முழுமைப்படுத்தும் முன்பே அவரை புற்றுநோய் தின்று தீர்த்தது. அவரது இறுதி பங்களிப்பையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் நோக்கத்தில் கட்டுரைகளை சிறு திருத்தங்களுடன் அப்படியே பதிப்பித்துள்ளோம்.தொகுப்பில் உள்ள கட்டுரைகளை வாசிப்பது மூலம் செல்வபெருமானின் பன்முக வாசிப்பைஅறியலாம். Life is to be great rather than short என்ற பாபா சாகிப் அம்பேத்கரின் சொற்கள் செல்வபெருமாளுக்கு மிகவும் பொருத்தமானவையாகவே உணர்கிறோம். இந்நூலை வாசிக்கையில் வாசகர்களும் நீங்களும் அதை உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.நூலின் முன்னுரையாக செல்வபெருமாள் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் தரும் வகையில் அவருடன் நெருங்கி பழகிய தோழர் இரா.முரளி அவர்களின் சிறு கட்டுரையும் மார்க்சிஸ்ட் இதழில் வே.மீனாட்சிசுந்தரம் அவர்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையும் இணைத்துள்ளோம். இக்கட்டுரைகளை வழங்கிய தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் இரா.முரளி அவர்களுக்கும் நன்றி கலந்த அன்பினை உரித்தாக்குகிறோம். செல்வபெருமானின் எழுத்துக்களை ஒருங்கிணைத்து இன்னும் வெளி வருவதில் உதவிய தீக்கதிர் துணைஆசிரியர் ம.மீ. ஜாபர் அவர்களுக்கு பாராட்டுக்கள். நூலினை சிறந்த முறையில் வடிவமைத்துக் கொடுத்த அன்பு தோழர் ஏ.ராமகிருஷ்ண அவர்களுக்கும், அட்டைப்படத்தை அழகுற வடிவமைத்த அந்தோணி குருஸ் அவர்களுக்கும் அட்டைப்பட ஓவியத்தை தீட்டிய புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் மாணவி கல்பனா ஸ்ரீ அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு