2026ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்பொழுதே தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். இவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்குச் சென்று மாவட்ட கழகச் செயலாளருடன் கலந்து பேசுகின்றனர். அதன் பின்பு மாவட்ட கழகக் கூட்டணியில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று, அதற்கான பணிகள் குறித்தும் விவரித்தனர். இவர்களுடைய பணி என்னவென்றால் முகவரிகளின் பெயர் பட்டியலை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல், கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் திறன் ஆகியவற்றை கவனித்து தலைமைக்கு தகவல்கள் கொடுக்க வேண்டும்.
இந்த பார்வையாளர்கள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆலோசனை வழங்க அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், துறைமுருகன், டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன், பூச்சி முருகன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றும், 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், அதுதான் நம்மளுடைய இலக்கு அதற்காக தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.