யூ.இ.எப்.ஏ. யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில், எம்பாப்பேயின் பிரான்ஸ் அணியானது, அயர்லாந்து அணியை ஒரு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி உள்ளது.
சர்வதேச கால்பந்து அணிகள், யூ.இ.எப்.ஏ. உலக கோப்பை தொடரை முடித்தவுடன், பல்வேறு லீக் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், உலக கோப்பையில் 2ம் இடம் பிடித்த கைலியன் எம்பாப்பேயின் பிரான்ஸ் அணியானது, யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான தகுதி சுற்றில் விளையாடி வருகிறது.
இந்த தகுதி சுற்றில், பிரான்ஸ் அணியானது அயர்லாந்து அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியின், முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், முதல் பாதியானது, கோலின்றி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 50 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.
இந்த கோலுக்கு பிறகு, இரு அணிகளும் பல முறை கோல் அடிக்க முயன்ற போதும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில், பிரான்ஸ் அணியானது 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு முன் பிரான்ஸ் அணி, நெதர்லாந்து அணியை 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு