இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் திரு பி.செந்தில் குமார் இஆப, தமிழ்நாடு வனப்படையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இவப, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.“தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்கள்” என்கின்ற தலைப்பில் சிறப்பு அஞ்சல் முத்திரை, ஆர்கிட் மற்றும் அயல் நாட்டு பறவைகள் குறித்த புத்தகத் தொகுப்பை தமிழ்நாடு வட்டம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.மேலும் இக்கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அவை பின்வருமாறு:
1. புவிசார் குறியீடு ஆத்தூர் வெற்றிலை படம் அச்சிடப்பட்ட சிறப்பு உறையை திருமதி. மரியம்மா தாமஸ் வெளியிட, தூத்துக்குடி என்எல்சி தமிழ்நாடு மின்சார நிறுவன முதன்மை செயல் அலுவலர் திரு கே அனந்தராமானுஜம் மற்றும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
2. புவிசார் குறியீடு மதுரை சோழவந்தான் வெற்றிலை படம் அச்சிடப்பட்ட சிறப்பு உறையை திருமதி. மரியம்மா தாமஸ் வெளியிட வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் திரு எஸ் சுகுமார் வெற்றிலை கொடிகள் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. எஸ் திரவியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
3. பறவைகள் சூழல் அமைப்பின் படஅஞ்சல் அட்டையை திருமதி மரியம்மா தாமஸ் வெளியிட்டார். பறவை ஆராய்ச்சியாளரும், கலைஞருமான திரு. ஆர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
4. அஞ்சல்தலை சேகரிப்பின் ஆர்வம் என்கின்ற தலைப்பிலான பயிலரங்கை அஞ்சல்தலை சேகரிப்பு ஆர்வலர் திரு. பி ஸ்ரீதரன் நடத்தினார்.
5. “வேடந்தாங்கலில் இடம்பெயர்ந்த பறவை” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கை சென்னை வனவாழ்வியல் பாதுகாவலர் திரு மனிஷ் மீனா, இவப தலைமையில் நடைபெற்றது.
6. மேலும் அஞ்சல் ஊழியர்களுக்கு இறகு எழுத்துகள் என்கின்ற தலைப்பிலான பயிலரங்கை தூரிகை கலைஞர் செல்வி ஏ ஜெயப்ரீத்தி நடத்தினார்.சுமார் 3295 பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர். இதில் பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், நாட்டின் கலாச்சாரம் இயற்கை அதிசயம் குறித்து இக்கருத்தரங்கு மூலம் அறிந்து கொண்டனர். இரண்டாம் நாளின் முடிவில் சுமார் 5500 பேர் இந்தக் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மெய்நிகர் அரங்கு பள்ளி குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. Phila Hunt எனும் பயிலரங்கம், பரதம் இயல், இசை, நடனம் நாடகம் மற்றும் உலக போஸ்ட் கிராஸிங், சூறாவளி சம்பந்தமான கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வரும் நாட்களில் பள்ளி குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம்.
6OV2.jpeg)
034F.jpeg)
TQNY.jpeg)
UGEF.jpeg)