அரசுக்கு எதிராக பத்திரிகையாளர்களை திசை திருப்பும் செய்தித்துறை அதிகாரிகள்
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி அங்கீகார அட்டை பெற்று வந்தவர்களுக்கு இந்த ஆண்டு திடீர் என அடையாள அட்டையை நிறுத்தியதால் தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) இந்த (2025) ஆண்டு பெரிய பத்திரிகைகள் மற்றும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பத்திரிகை, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் இருக்க வேண்டும். சிறு குறு பத்திரிகை நிறுவனங்களை துறையில் இருந்து அகற்றும் வகையில் செய்தித்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை குழுவினர் (Accreditation Committee) செயல்பட்டு வருவது வருத்தமளிக்கும் செயலாகவும், சர்வாதிகார செயலாகவும் உள்ளது . பத்திரிகைகளிலும், பத்திரிகையாளர்களிடம் பாகுபாடு, பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தினசரி 10 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும் என்ற நடைமுறையில் சாத்தியமில்லாத விதியை காரணம் காட்டி அங்கீகார அட்டையை நிறுத்தி வைத்துள்ளனர். அச்சு ஊடகத்தின் இன்றைய நிலை என்ன? சிறு குறு பத்திரிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாத செய்தித்துறை அதிகாடுகளும் ,பத்திரிகையாளர் அங்கீகார குழுவின் (Accreditation Committee) செயல்பாடு எப்படி சரியானதாக இருக்கும்? அங்கீகார அட்டை வழங்குவதில் பாரபட்சம் காட்டி வரும் செய்தித்துறை மீது பத்திரிகையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்பதை தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு கொண்டு வரும் சூழலுக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நடுத்தரம் மற்றும் சிறு குறு பத்திரிகைகளுக்கு பெரிய விளம்பரம் மற்றும் விற்பனையோ இருப்பது இல்லை என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் பெரும் சிரமத்திலும் குறைந்த எண்ணிக்கையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அச்சடிக்கும் எண்ணிக்கையை பார்க்காமல் தொடர்ந்து வெளிவரும் தன்மையை அறிந்து அனைவருக்கும் அரசு அடையாள அட்டை உடனடியாக வழங்கிட வேண்டும்
மாண்புமிகு தமிழக முதலைமைச்சர் அவர்கள் மற்றும் செய்தித்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு அடையாள அட்டையை வழங்கிடவும் 10 ஆயிரம் பிரதிகள் என்பதை மாற்றி பழைய நடைமுறைப்படியே 2 – ஆயிரம் பிரதிகள் என அரசாணையும்,விசாரணை என்றபெயரில் அச்சகத்தாரை ஜி.எஸ்.டி., வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தது , 10 பிரதிகள் அச்சடித்தற்கான பில் என சர்வாதிகாரத்தனமாக செய்தித்துறை அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும் எனஉத்தரவிடும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு செய்தித்துறை அதிகாரிகளின் சர்வாதிகார போக்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் ஒரு மித்த கோரிக்கையாக முன்வைக்கிறோம் .முதல்வர் அவர்கள் எந்த ஒரு பத்திரிகையாளனும் பாதிக்கக் கூடாது என நல் முடிவை எடுப்பார் என்ன நம்பிக்கையுடன்