சென்னை:
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய்கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த துக்கத்தையும், வேதனையையும் அளிக்கிறது. மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றங்கள் தடுப்பதிலும், குற்றங்களுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கும் வழக்கறிஞர் பணி இன்றியமையாதது. அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்ட. வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கொலை செய்யப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கேயும் நடக்கக்கூடாது. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானதும், அவசரமானதுமாகும். ராஜஸ்தானில் வழக்கறிஞர் பாதுகாப்புக்கென சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு