சென்னை:
தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஒட்சா கூட்டமைப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் வாழ்வியல் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று காலை நடைபெற்றது. ஒட்சா கூட்டமைப்பு நிறுவன தலைவர் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில தலைவர் கே.லட்சுமணன் முன்னிலை வகித்தார். தூய்மை காவலர், தூய்மை பணியாளர் மாநில சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.வெங்கடேசன், தூய்மை காவலர், தூய்மை பணியாளர் மாநில சங்கம், ஒட்சா கூட்டமைப்பு மாநில பொருளாளர் ஜி.கிரிஷா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
மாநில துணைத் தலைவர் எஸ்.சரவணன், ஓ.எச்.டி. பிரிவு மாநில தலைவர், கே.எம்.அக்பர், ஓ.எச்.டி. பிரிவு விழுப்ம், குமார், பொதுச் செயலாளர் சர்தார், துய்மை காவலர் பிரிவு மாநில தலைலவர் எம்.கோவிந்தம்மாள், மாநில செயலாளர் எம்.ராதா, மாநில பொருளார் கே.லட்சுமி, காஞ்சிபுரம் ஓ.எச்.டி. பிரிவு கண்ணியப்பன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 60 ஆயிரம் தூய்மைப்பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும், தூய்மைக் காவலர்களுக்க ஊராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டு பணி முடித்த ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குப நிழுவைத் தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர்களுக்கு பதவி உயர்வுடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சிககளில் தூய்மைப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியார்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு பணிநேரம், விடுப்பு, ஓய்வூதியம் ஆகியவை குறித்து தெளிவான பணிவிதிகள் உருவாக்க வேண்டும். அரசின் இலாவச வீடுகள் மற்றும் பிற சலுகைகளை கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பெற அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு