நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடைப்பெற்ற நேரு அம்பேத்கர் அரசியல் சட்டம் கருத்தரங்கம் நிகழ்வில் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்கள்.தனது உரையின் தொடக்கத்திலேயே, அண்ணல் அம்பேத்கர் மீதும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் சனாதன சக்திகளுக்கு இருக்கும் வெறுப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் இளந்தலைவர் ராகுல்காந்திதான் என்று புகழாரம் சூட்டினார். மேலும் நேரு குடும்பத்திற்கு தொடர்ந்து அபாயம் இருந்து வந்துள்ளதெனவும், அம்மையார் இந்திரா காந்தியை இழந்தது போல, ராஜீவ் காந்தியை இழந்தது போல, காங்கிரஸின் இன்றைய ஒற்றை நம்பிக்கையாக இருக்கும் ராகுல் காந்தியை இழக்க நேர்ந்தால், அது காங்கிரஸிற்கு மட்டுமின்றி தேசத்துக்கே நெருக்கடியை தரக்கூடிய ஒன்றாக அமையும் என எச்சரித்து, கவனம் காக்க வேண்டும் என்று கூறினார்.ஆனால் ராகுல் காந்தி அவர்களோ தனது தந்தை பாட்டியை போல, உயிரை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் நாட்டுக்காகதான் உழைப்பேன் என்ற முனைப்புடனும் துணிச்சலோடும்தான் நாடு தழுவிய நடைப்பயணத்தை மேற்கொண்டதாக புகழ்ந்து பேசினார். மேலும் நடைபயணத்தின் போது ராகுல் அவர்கள் அதிகமாக பேசிய விஷயம் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு இன்று இருக்கும் பேராபத்தை பற்றியே என்று நினைவுப்படுத்தினார். அவர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்றோ, என்னை பிரதமர் ஆக்குங்கள் என்றோ கோரிக்கை வைக்கவில்லை என்றும் மாறாக, இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தை பாதுகாத்திடுங்கள் என்றே சென்ற இடமெல்லாம் மக்களிடத்தில் கோரிக்கை வைத்ததாக கூறி, அவரது தொலைநோக்கு பார்வையை பாராட்டினார்.மேலும் பாஜக ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு தேர்தல் களத்தில் காங்கிரஸ் எதிரியாக இருக்கலாம்; ஆனால் அவர்களது இலக்கை அடைய முட்டுக்கட்டையாக இருக்கும் அரசமைப்பு சட்டமே அவர்களது பிரதான எதிரி என்று சுட்டி காட்டினார். மேலும் அரசமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணலை நேரடியாக விமர்சித்தால், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வாக்கு வங்கிக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக மட்டுமே அவர்கள் பொறுமை காக்கிறார்கள் என்றும் மற்றபடி அவர்களது ஒற்றை இலக்கு அரசமைப்பு சட்டத்தை அகற்றி சனாதன வர்ணாசிரம கொள்கைகளை அமல்படுத்துவதுதான் என்று திட்டவட்டமாக தெளிவு படுத்தினார்.பட்டியலின மக்களின் வாக்குகள் கணிசமாக காங்கிரஸுடையதாக இருக்கிறது, அதனை தடுக்க வேண்டும் என்பதே அவர்களது முதல் நோக்கம் என்றும், பெருவாரியாக பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினரே மாற்று மதங்களை தழுவுவதால், மதமாற்றத்தை தடுக்க வேண்டுமென்பது அவர்களது இரண்டாவது நோக்கமென்றும், இவ்விரண்டு நோக்கங்களுக்காவே அவர்கள் அம்பேத்கரை அரவணைப்பது போன்று நாடகமாடுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.மேலும் அரசமைப்பு சட்டமானது வெறும் ஒரு சட்ட ஆவணம் அல்ல என்றும் அது ஒரு மெனிபெஸ்டோ அதாவது ஒரு கொள்கை அறிக்கை என்றும் கோட்பாட்டு அறிக்கை என்றும் கூறினார்.மேலும் மற்ற நாடுகளை போன்றே, பாகிஸ்தானிற்கு இஸ்லாம் மதம் போன்று, இலங்கையில் பௌத்த மதம் போன்று, இந்தியாவிற்கு ஒரு அரச மதம் வேண்டும் என்று சனாதன சக்திகள் நினைக்கிறார்கள் என்று கூறிய தலைவர் அவர்கள், இந்த விஷயத்தில்தான் நேரு, காந்தி, அம்பேத்கர் மூவரும் நேர்கோட்டில் நிற்கிறார்கள் என்றும் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் எனும் ஒற்றை புள்ளியில் உடன்படுகிறார்கள் என்று கூறினார். இம்மூவருக்குள்ளுமே பல முரண்பாடுகள் இருந்தாலும், இந்தியாவின் மனசாட்சியாக திகழ வேண்டிய கோட்பாடுகள் என வருகையில் மூவரும் ஒரே பக்கத்தில் நிற்பதாகவும், அவர்களுக்கு நேரெதிரில் சனாதன சக்திகள் நிற்பதாகவும் தெளிவுபடுத்தினார்.இன்றும் நேரு, காந்தி, அம்பேத்கர் பக்கம் நிற்பது அவர்களின் வழிதோன்றலாக இருக்கும் ராகுல்காந்தி அவர்கள் என்றும், அதுவே சனாதன சக்திகளுக்கு அவர் மீது இருக்கும் வன்மத்திற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.தனது உரையின் முடிவில், மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டிற்காக காங்கிரஸ் வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் செய்திருப்பதை நினைவுக்கூர்ந்து தனது உரையை கரகோஷங்கள் முழங்க நிறைவு செய்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு