தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் சம்பந்தமாக கடந்த 3-1-2025 அன்று மதிப்பிற்குரிய நமது துறை இயக்குனர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.நமது சங்கம் சார்பாக நமது நிர்வாகிகள் நமது துறை இயக்குநர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அந்த பேச்சுவார்த்தையின்போது நமது இயக்குனர் அவர்கள் ஏற்கனவே நாம் வைத்த இரண்டு கோரிக்கைகள் உத்தரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.மேலும் உள்ள கோரிக்கைகளை வரும் பிப்ரவரிக்குள் விரைவில் முடித்து தருவதாகவும் உறுதி அளித்தார்.அதன் பிறகு நமது மாநில தலைவர் நமது இயக்குனர் அவர்களிடம் ஆய்வு கூட்டங்களிலின் வாயிலாக நமது துறையில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பானையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நமது சங்கம்சார்பாககேட்டுக்கொள்ளப்பட்டது.அதனை ஏற்று கொண்டு நமது மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்கள் உடனடியாக குற்றக்குறிப்பானையை ரத்து செய்து உத்தரவு வழங்குவதாக உறுதி அளித்தார்.இதற்கு நமது மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களுக்கும்கூடுதல் இயக்குநர் அவர்களுக்கும்இணை இயக்குனர் அவர்களுக்கும் நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு