திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 29 ‘ கள்ளாமை (பிறர் பொருளை அவரை வஞ்சித்து மறைவாக கவர நினையாமை)
குறள் 287: “அளவறிந்தார் செஞ்சத் தறம் போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு”
பொருள்:வாழ வேண்டிய அளவு அறிந்து வாழ்பவர் நெஞ்சத்தில் அறம் நிலைத்து நிற்பது போல், களவையே பழகியவரின் நெஞ்சத்தில் வஞ்சகம் நிலைத்து நிற்கும்
எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் மத்தேயு 6:22இல் “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.” என்றும், லூக்கா 10:30-31இல் “இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.” என்றும் திருக்குறளும் திருமறையும் கள்ளாமை எனும் வஞ்சகத்தை கைவிட ஒரேவிதமாய் வலியுறுத்துவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை.