1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 8. அன்புடைமை
அன்பின் வழியது உயர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோ போர்த்த உடம்பு –குறள் : 80
அன்பின் வழியில் இயங்கும் உடம்பு உயிர் தங்கியிருக்கும் உடம்பாகும், அன்பு இல்லாதவர்களுடைய உடம்பு, எலும்பும் தோலும் போர்த்திய உயிரில்லாத வெற்றுடம்பாக ஆகும்.