திருவள்ளூர் மாவட்டம் , பள்ளிப்பட்டு வட்டம் ஸ்ரீகாவேரிராஜப்பேட்டை கிராமத்தில் பழங்குடி போராளி பிர்சாமுண்டா அவர்களின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்த்தேச பழங்குடி முன்னணி மாநில இளைஞர் அணி தலைவர் என்.கே.டில்லிராஜா,மாநில அமைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் D.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்த்தேச பழங்குடி முன்னணி நிறுவனத் தலைவர் நை.க. ஏகாநந்தன் , உதவும் உறவுகள் அறக்கட்டளை பள்ளிப்பட்டு ஒன்றிய தலைவர் சொ.புவனேஸ்வரி, 3வது வார்டு உறுப்பினர் N.V.நீலவேணி விநாயகம் மற்றும் A.M.பற்குணம், V.N.பழனி ஆகியோர் கலந்து கொண்டு பிர்சாமுண்டா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.