இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சிறப்பாக ஓடிவருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும், லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘துணிவு’ திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘துணிவு’ திரைப்படத்தில் 50-வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழு இறங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு