போலிகளாம்.. போலிகள் பகுத்தறிவு போலிகள்..
பட்டறிவு இல்லா சொத்தைகளாய் போலிகள்
ஆசை சொல்லும் போலிகள் அறிவு கெட்ட போலிகள்
அடிமையாக்கி மக்களை அடக்கிட பேசும் போலிகள்
உயர்வு செய்யா போலிகள் உணர்வை கொல்லும் போலிகள்
தமிழர் மேன்மை கெடுக்கும் தப்புகளாய் போலிகள்
அறிவு பேசா போலிகள் அழிக்க பேசும் போலிகள்
தரங்கள் கெடா மக்களின் தவங்களை அழிக்கும் போலிகள்..
சாதிகள் இழிவாக்கியே சதிகள் விதைக்கும் போலிகள்
சான்றுகளாய் இயற்கையை வணங்க கெடுக்கும் போலிகள்
தமிழர் நாட்டை பறித்து நிற்க சதிகள் பேசும் போலிகள்
தன்னை மட்டும் உயர்த்த எண்ணும் தனல்பரத்தும் போலிகள்
தப்புத் தப்பாய் பேசித் தமிழர் நலங்கெடுங்கும் போலிகள்..
இவர்கள் தானே போலிகள் இவரால் இழந்தோம் நலந்தனை..
இவர்கள் இன்றேல் இங்கே.. ஏழ்மை ஏதடி தோழியே?
வறுமை அவரால் தோழி.. வளமை கெடுத்தார் தோழி
ஆட்சியும் போனது அவரால் அவமானம் ஆனதடி தோழி
சாதிகள் எங்கும் உண்டு அது இருக்கும் இடம் போலே..
செயல்கள் அதுபோல் மாறும் உணவும் உடையுமாக!
அதனால் என்னடி தோழி? அடிமைத் தனமல்ல தோழி
உழவும் நெசவும் தொழிலும் உருபட செய்ய தோழி
இருக்குது பார் ஆயுதம் இருப்பவர் செய்வார் வேலையாய்..
அது அதுவே அவருக்கு தொழிலாய் ஆனது தானே உலகமே..
அதனை வைத்தா சொல்லுவார் அடிமை என்றா செய்யுவார்?
ஒவ்வொரு வேளை நாளுமாய் ஓடும் கடல் மேல் படகுமாய்
செய்வதன்றி யேதம்மா? திறனும் உணவும் சோறுமாய்..
ஏரும் கலப்பையும் உறவுமாய் எதையும் செய்வார் திறனுமாய்!
அறியார் சொன்னார் அதையுமாய் அடிமை சாதிகள் என்றுமாய்..
பேசும் பேச்சும் அகந்தையால் பெருமை அழிக்கும் போலிகன்..
கவலை அதனில் விடிவுமாய் கலைகள் பாடியே மகிழுவாய்..
வேலைகள் செய்ய விழைவுமாய் வேற்றுமை எண்ணத்தை கலைப்புமாய்!
தொழில்கள் இன்றி ஏதமா? தொல்லைகள் போமா சொல்லம்மா?
ஆட்சி செய்வாய் தமிழம்மா.. அரை குறைகள் எதற்கம்மா?
போலிகள் இருப்பை தகர்ப்புமாய் பொய்யைத் தூற்றி அடிப்புமாய்
நலங்கள் பேச பொறுப்புமாய்.. நாம் நிற்போம் விளக்கமாய்!

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு