புதிய எண்ணம் கொள்வோம்

– ஜென்னி வினோதா

இனிக்கும் இனிய ஒவ்வொரு நாளிலும் அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்லி வணங்குவோம்.

எந்த ஆண்டும் நல்ல ஆண்டுதான் எந்த நாளும் நல்ல நாள் தான் என்ற நேர் மறையான எண்ணம் உள்ளவர்களாக வாழ்க்கையை நகர்த்துவோம். நாளயை பொழுதைப் பற்றிய கவலை எதற்கு இன்று நடப்பதை எப்படி எதிர்கொள்வது எப்படியும் எதிர்கொண்டுதான் வாழனும் இன்றைய நாளை நன்முறையில் வாழ இறை சித்தனையுடன் விடியலை எதிர்கொள்வோம். இங்கு இறை சிந்தனை என்று சொல்வது பகவத் கீதை ஆனாலும் சரி குர்ஆன் ஆனாலும் சரி திருவிவிலியம் ஆனாலும் சரி எல்லாவற்றிலும் கொடுக்கப்படும் ஒரே கருத்து அன்பை பகிருவோம் அன்போடு பிறரிடம் நட்புறவு கொள்வோம். என்ற ஒன்றை மட்டுமே அதைதான் இங்கு இறை சிந்தனை என்று குறிப்பிடுகிறேன்.

நாம் எப்படியோ அப்படிதான் நம்மை சுற்றியுள்ள உறவுகள் நமக்கு அமையும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். இதற்கு முதலில் இறை நம்பிக்கை அல்லது தன்னம்பிக்கை முழுவதுமாக பிடித்துக் கொள்ளுங்கள்.  நம்மை நாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் நாட்களையும் நன்றாக கூர்ந்து கவனிக்க முடியும்.

நமது தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைக்கான எந்த வரிகளும் வார்த்தைகளும் முன்னோர் சொல்லவில்லை. ஏனெனில் நமது முன்னோர்களுக்கு அப்படிப்பட்ட ஒன்றும் தேவைப்படவில்லை. நமது முன்னோர்கள் அனைவரும் கூட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எல்லாவற்றிலும் பிறருடைய ஆலோசனையை கேட்டு மகிழ்ந்து இருப்பவர்கள். அது காதலாக இருந்தாலும் உற்ற தோழமையுடன் மகிழ்ந்து பகிர்ந்து ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலுமாக எல்லா வகையிலும் இருந்தார்கள். அந்த வகையில் பார்த்தால் அன்று அவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது ஒரு பொருட்டாக யாரும் பார்க்கவில்லை. அனைவரும் அனைவருக்காக வாழ்ந்தார்க்ள். அரசனை நம்பிதான் மக்கள் வாழ்வர். எனவேதான் அறம் மற்றும் புறம் என்னும் கருத்துகள் வந்தது. அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் வாழ்ந்தனர்.

இன்று வாழ்க்கை முழுவதும் மாற்றம் பெற்று விட்டது. ஒவ்வொருவரும் அவர்களுக்காகவே வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக மனிதன் தன்னை பல சூழ்நிலைகளில் தாழ்வாக நினக்கும் எண்ணம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பார்த்தோமானால் தன்னை விட மற்றவர் நலமுடன் இருக்கின்றனர் என்ற எண்ணம் மேலோங்கி வளர்வதால்தான் இவ்வாறு சிந்திக்கும் நிலை ஏற்படுகிறது. தன்னைப்போல் தான் பிறரும் என்ற எண்ணம் வரும்போது தன்னை தாழ்வாக எண்ணும் நிலை வராது.

இயற்கையாக இருக்கம் சூரியன் கூட ஒவ்வொருநாளும் மறைந்து பின்னர் விடியலை தருகிறது. நான் எப்போதும் இப்படிதான் அனைவருக்கும் தெரிந்து கொண்டே இருப்பேன் என்று சூரியன் நினைக்குமானால் மனிதனின் வாழ்க்கை கேள்வி குறிதான். இயற்கையும் தனக்கு தகுந்த கால மாற்றங்களை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் தான் மனிதனும் எப்போதும் நான் உயரமாகவே இருப்பேன் என்று நினைப்பது தவறு. ஒரு நேரம் நாம் உயர்வோம் மற்ற நேரம் அமைதியாக இருப்போம். வாழ்க்கை முறையை வாழ சரியான எண்ணங்களுடன் உலாவருவோம்.

அதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று, ஒருமுறை ஔவையார் அதியனிடம் பாடல் பாடி பரிசில் பெறச்சென்றார். ஔவை மீது அதியன் கொண்ட அன்பாலும், தமிழ்ப்பற்றாலும் ஔவைக்கு உடனடியாகப் பரிசில் தராது காலம் தாழ்த்தினான். பரிசில் கொடுத்துவிட்டால் ஔவை தன்னை நீங்கி வேறிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமே அதியனின் காலம் தாழ்த்தலுக்கான காரணமாகும். ஔவையோ அதியனின் காலம் தாழ்த்தலைத் தாங்க இயலாதவறாக “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என வேறிடம் செல்ல எண்ணியபோது, அதியன் ஔவையின் விருப்பப்படி நிறைய செல்வங்கைளத் தந்து அனுப்பி வைத்தானாம். ஔவை சென்றபோது தன் வீரர்களைக் கள்வர்கள் போல அனுப்பி ஔவையிடம் கொடுத்த செல்வத்தை கைப்பற்றச் செய்தானாம். அப்படியாவது ஔவை தன்னிடம் மீண்டும் வந்துவிடுவார் என்ற அதியனின் எண்ணமே இந்தச் செயலுக்குள் காரணமாகும். அதியனின் இந்தச் செயலுக்குள் மறைந்திருப்பது ஔவை மீது அதியன் கொண்ட அன்பும் தமிழ்ப்பற்றும் தான்.

இதை சொல்வதற்கான காரணம் அன்றைய புலவர்கள் யாரும் தனக்குதான் வாழ்ந்தது இல்லை. தான் வாங்கிய பரிசுகளையும் பொருட்களையும் பிறருக்கும் கொடுத்து தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இன்றைய நிலை தனக்கு மிஞ்சியது தான் தானம் தவம் என்று மாற்றிய பழமொழியாக உள்ளது. ஆம் பழமொழிகளையும் மனிதன் தன்வசம் போல் மாற்றி விட்டான்.

இப்பழமொழியின் உண்மை என்னவெனில் தனக்கு எஞ்சியது தானமும் தர்மமும் தான். மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசியில் போகும் போது அவனது இறுதி வாழ்க்கையில் அவன் செய்த நல்ல காரியங்கள் மட்டும் வெளிப்படும். எத்தனை பேருக்கு என்ன செய்துள்ளான். என்னென்ன நற்செயல்கள் செய்தான் இதை மட்டும் தான் பேசும் தவிற அவன் சம்பாதித்த செல்வங்களை குறித்து பேசாது. இதைதான் தமிழர்கள் கூறியது இதுவும் காலப்போக்கில் நாம் மாற்றிவிட்டோம். 

இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை ஆராய வேண்டும். நாம் வாழும் வாழ்க்கை எதற்கு யாருக்கு என்று பார்க்க போனால் நான் கூறியது போல எல்லாவ.ற்றறிற்கும் ஒருவர் காரணமாக இருப்பர். அது நீங்கள் அல்ல என்பது மட்டும் புரியும். இதை உர்ந்தால் நமது வாழ்க்கையும் நன்றாக இருக்கும். நமக்குள் இருக்கின்ற சிறந்த  செயல்களை பிறருக்கு கற்றுக் கொடுக்க தவற வேண்டாம். அதிலும் நாம் சிறப்புப் பெருவோம். உனக்காக இறைவன் அல்லது இயற்கை கொடுக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது உன்னால் பிறருக்கு பயன்படுவதற்காகவே தவிற வேறு எதற்கும் இல்லை.

திருக்குறளிலிருந்து பொருட்பாலில் ஆள்வினை யுடைமையில் இருந்து ஒரு குறளையும் உங்களுக்கு சொல்கிறேன் கேளுங்கள் குறள் 620.

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”

ஊழ் என்பது வெல்ல முடியாது என்று பொருள் அதாவது ஒருவரும் முதுகுபுறத்தை காண இயலாது இப்படியும் பொருள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முயன்று செயல்பட்டுக் கொண்டே இருந்தால் அவன் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. எது முடியாது என்று சொன்னார்களோ அதுவும் அவரால் இயலும் என்பதே இதன் பொருள்.

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”

கடவுளே கடவுளே என்று சொல்வதை விட்டு விட்டு நாம் முயற்சியில் ஈடுபடுவோம். கடவுளும் நம்மோடு இருப்பார். நம் உடலையும் நம் சிந்தனையையும் நாம் நம் செயலில் நன்கு ஈடுபடுத்தி செய்வோமானால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

எனவே நன்மக்களே… எப்போதும் செயலில் வெற்றி காண்போம். நாளை குறித்து கவலை கொள்ளாமல் இருப்போம். எல்லோரிடமும் அன்புடன் பழகுவோம். நாளை உனக்காக காத்திருக்கும் என்று கூறி எனது இக்கட்டுரையை முடிக்கிறேன். இது ஆலோசனை அல்ல எனது சிந்தனை என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

நன்றி!! வணக்கம்!!!

மை. ஜென்னி மேத்யூ
அபுதாபி.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

12 Responses

  1. அன்பை பகிர்வதற்கு புதிய எஎண்ணங்களை சிறப்பான முறையில் உருவாகுவதற்கு சரியான உவமைகளை எடுத்துரைத்து இக்கட்டுரை இயற்றியமைக்கு மிக்க நன்றி.

    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. நன்றி.

  2. புதிய எண்ணம், என்ற தலைப்பில் நீங்கள் சொல்லிய வரிகள் மிகவும் எளிமையாக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் தோழி

  3. அருமையான தன்னம்பிக்கை பதிவும் விளக்கமும். வாழ்த்துக்கள்

  4. அருமை
    நேர்த்தியான கட்டுரை
    வாழ்த்துகள்

    1. தங்களின் கருத்திற்கு மகிழ்ச்சி ஐயா. மிக்க நன்றி

  5. முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பனுக்கினங்க மூடநம்பிக்கை அகலவே அறிவை பயன்படுத்தி வாழ் எனும் இப்படைப்பு அருமை…
    அன்பை போதிப்போம்…!
    அன்பை மட்டுமே போதிப்போம்…!

    1. மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துகளால் எனது படைப்பு மெருகேற்றப்படுகிறது. இதய நன்றிகள்.

  6. அருமையான பதிவும் விளக்கமும். வாழ்த்துக்கள்

    1. எழுத்துகள் சமூகத்தில் பேசப்பட வேண்டும் என்பதே என் அவா. மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய