மா.செ பதவிக்கு போட்டி.!
கட்சியில் உள்ளடி வேலைகளை ஆரம்பித்த லேட்டஸ்ட் நிர்வாகிகள்.!
திமுக கட்சியின் தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’ வைக்க ஆரம்பித்த தகவல் வெளியாவதற்கு முன்பாக எப்படியோ தகவலை அறிந்த அக்கட்சி நிர்வாகி, மாவட்ட பொறுப்பில் இருப்பவரின் ஒருவருடைய ஒப்புதலோடு முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க கூடாது என தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விசயம் சம்பந்தப்பட்ட முன்னாள் ச.ம.உ அவர்களுக்கு தெரியாத என்ற நினைப்பில், கட்சி நிகழ்ச்சியில் அவருடனே அமர்ந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் வருகிறார். அதுசரி கூட இருந்தே துரோகம் செய்தால் தானே அரசியலில் வளர முடியும்.!
தற்போதுள்ள திருப்பூர் தெற்கு மா.செ அவர்களுக்கு தாராபுரம் , காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளை ஒதுக்கி மா.செ பொறுப்பு வழங்கினாலும், மடத்துக்குளம் , உடுமலை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு யார் மாவட்ட செயலாளராக ஆக வேண்டும் என்ற பேராசையில் தற்போது இருந்தே கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதுசரி ஒ.செ. பதவி வழங்குவதற்கு முன்பாக வால்போஸ்ட் அடிச்ச கோஸ்ட்டி , மா.செ பதவிக்கு என்ன வேணாலும் செய்வார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் , சட்டமன்ற தேர்தல் , உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலிலும் கட்சிக்காக பல்வேறு யுக்திகளை வகுத்து திமுக கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் பன்முகத்தன்மை கொண்ட கட்சியின் முக்கிய நபர்களை புறக்கணிப்பது இப்போதைய ஃபேஷன்.! பணம் இருந்தால் மட்டும் போதும் கட்சி பொறுப்பை வாங்கி விடலாம் என்ற குருட்டு நம்பிக்கை நம்பிக்கை உள்ளவர்கள் சிலர்.! மேலும் பொறுப்பை பெற்ற பிறகு தன்னுடைய சாதியை சேர்ந்தவர்கள் , தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது பலரை முகம் சுழிக்க வைக்கிறது.
திமுக தலைமை இந்தமுறை கட்சிக்காக உழைக்கும் நபர்களை தேர்வு செய்து பொறுப்பு வழங்குமா அல்லது சிபாரிசின் அடிப்படையில் பொறுப்பு வழங்குமா என்பதை பார்க்கலாம்..!