வெறும் வாசனைக்கு மட்டுமே பயன்படுத்தி கொண்டிருக்கும் பிரிஞ்சி இலைகளில், அபாரமான மருத்துவ குணங்கள் உள்ளன.. அதேசமயம், ஆன்மீகத்தில் பிரிஞ்சி இலைகளுக்கு நிறைய முக்கியத்துவங்கள் உள்ளன.. பிரிஞ்சி இலைகள் செரிமானத்தை தூண்டக்கூடியது. சிறுநீரகத்தை காக்ககூடிய தலையாய பணிகளையும் இந்த இலைகள் செய்கின்றன.. முக்கியமாக, சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அதனை கரைத்து வெளியேற்றிவிடும். அல்லது பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் காய்ச்சி ஒரு கிளாஸ் குடித்து வந்தாலும், கிட்னியிலுள்ள கற்கள் உடைந்து வெளியேறும். நார்ச்சத்து மூலதனமாக கருதப்படும் பிரிஞ்சி இலைகள், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது.இந்த இலையில் டீ தயாரித்து, அதில் தேன் கலந்து குடிப்பதால், உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்து வெளியேறும். நீரிழிவு நோயாளிகள், பிரிஞ்சி இலையை பயன்படுத்தும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.இப்படி மருத்துவ குணங்கள் ஏராளமாக இருந்தாலும், ஆன்மீகத்தில் பிரிஞ்சி இலைகள், சிறப்பான இடத்தை பெற்றுள்ளன.. பிரிஞ்சி இலைகளின் பூர்வீகமாக கிரேக்கம் இருந்தாலும், கிரேக்க கடவுளாக கருதப்படும் அப்பாசோ பிரிஞ்சு இலையை பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும் கருதப்படுகிறது… அதுமட்டுமல்ல, சூரியனின் தன்மையை கிரகிக்கவும் இந்த பிரிஞ்சி இலை உதவுகிறது.குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கவும், பணக்கஷ்டம் நீங்கவும், வேண்டுமானால் பிரிஞ்சி இலைகள் பரிகாரங்கள் அதற்கு கைகொடுக்கின்றன. வீட்டில் பணக்கஷ்டம், கடன் தொல்லை இருந்தால், இந்த பிரிஞ்சி இலை பரிகாரம் செய்யலாம். இதற்கு பிரிஞ்சி இலை ஒன்றை எடுத்துக் கொண்டு, அதில் உங்களது கடன் தொகையை எழுதி, பீரோவில் வைத்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து, இந்த பிரிஞ்சி இலையை வெளியே எடுத்து, நெருப்பில் பொசுக்கி, அந்த சாம்பரை நீரில் கரைத்துவிட வேண்டும். பிறகு மீண்டும் புதிய பிரிஞ்சி இலையில் கடன்தொகை அடைய வேண்டும் என்று எழுதி பீரோவுக்குள் வைக்கலாம். இதனால் உங்கள் நிதி சிக்கல் விரைவில் தீருமாம்.பிரிஞ்சி இலையில் கடன் தொகை எழுதி பீரோவில் வைப்பதைபோல, வீட்டின் பூஜையறையிலும் அல்லது லட்சுமி போட்டோவின் பாதத்திலும் வைக்கலாம். பிரிஞ்சி இலையில், நீல நிற பேனாவில் “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமியின் மந்திரத்தை எழுதி, உங்களது பர்ஸ் அல்லது நகை பெட்டியிலும் வைக்கலாம். ஆனால், இந்த இலை கிழியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.வீட்டிலுள்ள திருஷ்டி, துர்சக்திகள், எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, பிரிஞ்சு இலையை எரிக்கலாம்.. இந்த இலையை எரிப்பதால் உண்டாகும், புகையானது, நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. அதேசமயம், வீட்டிலுள்ள தீய சக்திகளை விரட்டக்கூடியது. அதேபோல, பிரிஞ்சு இலைகளை பவுடராக்கி, அதை பன்னீருடன் சேர்த்து வீட்டில் தெளித்து வந்தாலும் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.அதேபோல, இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரேயொரு பிரியாணி இலையை தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், உங்களை துர்சக்திகள் நெருங்காது, கெட்ட கனவுகளும் அண்டாது என்பார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு