மழை வந்தாலே அதுஒரூ வாசம்
மணம் கமழ்ந்தாலே நினை வொரு வாசம்
காற்றென்றாலே அது பல வாசம்
கலந்து நின்றாலே சொந்தங்கள் வாசம்..
உணர்வென்றாலே உரிமைகள் வாசம்
ஊட்டல் என்றாலே அன்பென்னும் வாசம்!
கன வென்றாலே அது கொண்டாட்டம்!
களிப் பென்றாலே அது உயிரோட்டம்!
அறி வென்றாலே அது செய் வாசம்
அன்பென்றாலே அது சீர்செய் வாசம்!
தரவென்றாலே அது கொடை வாசம்
தனதென்றாலே அது கை வாசம்!.
பொது வென்றாலே அது பெரும் வாசம்
பொரு ளென்றாலே சொல் தரும் வாசம்
நா ளென்றாலே நன்மைகள் வாசம்
நாக் கென்றாலே சொல் பல வாசம்!
கூட்டென்றாலே நட்புகள் வாசம்
குறை கண்டாலே திருத்தங்கள் வாசம்
பொழு தென்றாலே துணையென பேசும்!
புரிந்து நின்றாலே அது சுகவாசம்!
வாசம்.. வாசம்.. வாழ்க்கையும் வாசம்
வாழ்ந்திடத் தானே பிறப்புகள் வாசம்
கொடு யென்றாலே கொடுப்பது வாசம்
கோ னென்றாலே அரண்மனை வாசம்
குலம் என்றாலே தழைத்திட வாசம்!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.