தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- மலைவளம் என்பது வியாபார பொருள் அல்ல. அது மக்களுக்கானது. அதனை கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தென்காசி மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் . அவர் வேறு, நான் வேறு. எங்களுக்கு இடையே உள்ள பந்தம் அண்ணன்-தம்பி போன்ற உறவு மட்டும் தான். நான் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார். அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. அண்ணாமலை நேர்மையானவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உண்டு. ஆனால் அவர் சார்ந்த கட்சிக்கு அந்த தகுதி உண்டா என்ற கேள்வி எழுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க ஆகியவை ஊழலை பற்றி பேச தகுதி இல்லாத கட்சிகள். தமிழ் வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக பா.ஜனதா அறிவித்தால் நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு